Sunday, 6 July 2014

                                                         Parihaarams

1- For Solving Misunderstandings/Disputes Between Mothers:
    * To worship Ramar & Lakshmanar continuously on 3 navamis 
    * To offer Naivedhyams to Bhairavar ( in any temple) on 3 Saturdays evening & Pray with
       Urad Dhall & Honey

2- For Business Development
     * 10/30 to 12 noon - Kuligan Time on wednesdays - Do special Pooja /Abishekams for                         Bhairavar with Milk,Honey,Abhishekams - Punuku saathal - Paasi Paruppu Sundal
        Pasi paruppu adai and  giving to the persons nearby area around the Temple.
     * To Feed as many Country Dogs as possible daily. STreet dogs better. 
     * Wednesday Feedings on Kuligan Timings - Street Dogs - rice with Paasi Paruppu
     * WEdnesday visiting near by Blue Cross Centers & feed/ donate for assistance for dogs there

 3. For Chronic Deseases
     * To Pray Lord Murugan with Valli/Deivyanai  both escorts on Tuesdays & Light Deepams                with Ghee.
     * To do "Sembaal" ABhishekam ( Red milk - Milk mix with Kumkum) to Chathurmuka                      Murugan ( only Murugan with Four faces) at Sivasubramania swamy Temple at Chinnalaptty          near Dindigul.
     * To do Special Poojah/Abhishekams to Murugan and offer Annadaanam - Rice with Beetroot
        Mix to the Devotees in the Temple.
     * To do Annadanams at any Murugn Temple / Sashti-Krithikai- Uthiram-Tuesdays-                             Annadanam with Tomato rice,Beetroot Sweet, Grape Fruits & all Red Food Items

SIMPLE   PARIHAARANGAL   FOR  VARIOUS  PROBLEMS  

In olden days , immediately after making food one of the family members used to keep a bit of Rice & Dall with Ghee to Crows . this is done daily after performing Poojah & Naivedyam to the Gods images in the House. Similarly we used to keep a small mud tank outside the house in a Corner with Water(Kazhuneer) there we used to pour the wasteges of vegetables, cooking wastes
and all water wastes. That will be taken by the Cattle going through the Streets. If the Tank is empty, The Cattle will give a sound and somebody from the house will then atleast put some water in the tank. See how much we had been accustomed to live affectionately with surrounding animals. 
These things are now being advised by Astrologers/Philanthrophists  as a measure of Parihaaram for various things.
If having belief in Hinduism, Please try to be a genuine Hindu by following Hindu Culture, Having Faith in Hindu Beliefs, and leading life without avoiding family heriditary rituals in routines etc.,

1. Our Ancestors lived places nearby river banks, constructing houses around a Temple already in exietence there. They used to have proximity to Earth,Water,Clean Air Etc., We have to live , if in apartments, it shall be within 3 floors. Then only, the life will be earthly life. There shall be free way for air from all sides either through windows/ any other means. 
We have to keep Small Kitchen Plants in the available Balcony spaces.This will facilitate birds to come & stay.
2. Daily we shall grant food to Birds that will come. If food,cereals with water kept separately outside the window, even if no birds come initially, Few birds come in due course and depending on your punctuality, at the routine time.If the habit is deevelopped, arrangements shall be made for Birds feeding , during our absence in the apartment.
3. We have to feed the cows/cattle in any of the Goshalas nearby periodically. It is not merely donating money for feeding- But either purchasing cattle feeds from our money and handing over to the Cattle personally. Or atleast hand over the cattle feeds personally to the caretaker of the cattle.
4. In oldendays every family used to support needy youth - either by feeding daily in the house and treating them as one of the family members , aiding the needy by paying School fees etc., and giving support to the needy in all the possible ways. As a revalidation of this, we can help, needy students nearby in all the possible ways. Doing Annadaanams in the Home for children.





Saturday, 31 May 2014

GURU PEYARCHI - SPECIAL GURU TEMPLES

GURU PEYARCHI - VISESHA STHALANGAL


  • Alangudi
    Travel base: Kumbakonam
  • Thittai
    4 kms from Tanjore in the Tanjore – Kumbakonam route
    Travel base: Tanjore
  • Thiruvalleeswarar at Padi
    Opposite to Lucas TVS
    Travel base: Chennai
  • Thakkolam in the Kanchipuram – Arakkonam route
    Travel base: Chennai / Kanchipuram
  • Elumiyankottur  on Thiruvallore – Thakkolam 
  • Govindavadi Agaram near Thakkolam
    Travel base: Chennai
  • Medha Dakshinamoorthy at Mayiladuthurai
    Travel base: Mayiladuthurai
  • Thirisoolam near Chennai Airport
    Temple is on the opposite side of Airport – Cross the railway gate
    Travel base: Chennai
  • Suruttapalli – Thambadhya Dakshinamoorthy
    Travel base: Chennai
  • Guru temple at Kanchipuram
  • Ramanatheswarar Temple at Porur
    Travel base: Chennai
  • KURUVITHURAI - CHITHRA VALLABHESWARA PERUML TEMPLE NEAR SOZHAVANDAAN where Lord Guru Bagwan prayed to Perumal for solutions. Here Perunthevi Thayaaaar Mahaalakshmi is also mpowerful. Guru Bhagwan in aseparate Sannathi - small campus on the outer side of the Perumal temple on the banks of Vaigai. The place name, has been coined from Guruvin Thuirai, which means Guru"s River Bank.
  • Pattamangalam near Thirupathur in Sivagangai District . the Temple has sepaarte sannathi for Dakshinamurthy facing South before the Raja Gopuram. one of the ancient temples with history & Back ground. The Banyan & Neem Tree combination @ Guru sannathi is said to be more than 1000s of years old. very powerful Guru temple .
  • Munnuur near Thindivanam . this Temple has now become popular of finding out few culverts by ASI and the name of the Town munnur means " Ellaa oorukkum munthaiya ooru" Just like thirupattoor near Trichy, just like Padavedu near Vellore, and just like Thakkolam Munnur also said to be once full of temples and There is a Separate Guru Sannathi facing South outside main temple inner entrance and it is said all the devars worshipped here Guru.( Adalvallaan temple)Here also idols are being find out on every excavation for renovation of temples. Sivan,Perumal with Yoga narasimhar,Chiranjeevi Hanuman , Murugan Temple, amman temples are there.
  • Thriloki near Thiruvidaimaruthur near Thuhili - Akilandeswari Ambal Sametha Sundareswarar. Here Guru bagwan worshipped Shivan for his problems and Guru in Worshipping Posture facing Shiva. Worshipped by Karuvur Siththar also

Temples that are special for Guru Peyarchi:
   All Temples having Separate Sannathi for Guru / dakshinamurthy facing South.
   All Temples having Dakshinamurthy in Outer Walls on the Southern side of Moolavar Prahaaram,If the                Dakshinamurthy is in a sitting position under a Banyan Tree with Sanath Kumarars as sishyas, it will be 
   usual.If the Silaroopam is in a different posture / either with any instrument like Veena etc., or sitting /or with      other rishis also along with sanath kumarakal That moortham will have very special powers which can be 
   learnt from that temple priest. 
   All the athishtaanams / jeeva samathis/brindavanams of Great Siththars/Saints/Sanyasis.

Sunday, 27 April 2014

Brief Spacialities Temples

porpanai kottai bairavar
புதுகோட்டைக்கு அருகில் உள்ள பொற்பனைக் கோட்டை என்ற ஊரில் உள்ள ' பைரவர் கோவிலில் பைரவரின் உருவம் பத்து அடிக்கு மேல் உயரமுள்ளது. பைரவருக்கு ஏணி மீது ஏறியே தினமும் அபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இவருக்கு வெள்ளிக் கிழமை சந்தனக் காப்பும், வடை மாலையும் சாத்துகின்றனர். 


சிவன் கையில் சக்கரம்!

பெருமாளுக்குரிய சக்கரத்தை சிவனும் வைத்திருக்கிறார்! இதைக் காண வேண்டுமானால் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவிற்குடி  மயானேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். சிவன் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அஷ்ட வீரட்டத் தலங்களில் இது ஒன்று. இங்கு சலந்தராசுரனை சக்கர ஆயுதத்தால் சிவன் அழித்தார். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனின் திருநாமம் திருமயானேஸ்வரர். அம்மன், பரிமள நாயகி. உற்சவரின் திருக்கரங்களில் சக்கரம் உள்ளது. இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, மயில் மீது தேவியருடன் அமர்ந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஒரே ஆலயத்தில் பஞ்சபூதங்கள்

பஞ்ச பூதத் தலங்களின் சங்கமமாக ஐந்து சிவ சந்நதிகள் கொண்ட அபூர்வ ஆலயம் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 'கொண் டாபுரம்' கிராமத்திலுள்ளது. பஞ்ச பூத நாயகனாக, சர்வேஸ்வரனாக வழிபடப்படும் இறைவன், 'பஞ்சலிங்கேஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். 

பாறாங்கல் கோயில் 

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் முழுவதும் பாறாங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள லிங்கத்தின் பீடம் மட்டும் 40 அடி நீளம். ஆவுடையாருக்கும், லிங்கத்திற்கும் உடுத்த வேண்டிய வேட்டி, துண்டை தனித்தனியாக நெய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத பவுர்ணமி நாள், மதிய வேளையில், இறைவனுக்கு மாபெரும் அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. இப்படிச் செய்தால் மக்கள் அவ்வருடம் முழுவதும் பசியால் வாடாமல் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. அபிஷேகம் செய்த அன்னத்தை தயிர் சாதமாகக் கலந்து பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்குகிறார்கள்.

குழந்தை வரம் தரும் க்ஷேத்திர பாலகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சக்கரத்தாழ்வார் சந்நதி முன்பு ஒரு பெரிய கல் நடப்பட்டுள்ளது. இதை 'க்ஷேத்திர பாலகர்' என்கிறார்கள்; தங்கள் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள். இவரை வணங்கினால் மகப்பேறு வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விதவிதமாகக் கொண்டைகள் 

விருத்தாசலத்திற்கு அருகே ஸ்ரீமுஷ்ணம், பூவராக சுவாமி திருக்கோயிலிலுள்ள 16 கால் மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் நாட்டியப் பெண்ணின் சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியே நாயக்கர் கொண்டை, ஆண்டாள் கொண்டை என பலவித கொண்டை அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்கள். 

Saturday, 26 April 2014

NEEDUR SOMANATEESWARAR - REMOVING SKIN DESEASES

சுயம்பு மூர்த்தியாக, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக, இப்பூவுலகில் கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் விளங்கி வரு கிறார் சோமநாத சுவாமி. சகல சாபங்களையும் போக்கும் கோயில் இது என்கின்றார் பதஞ்சலியார். சூரியநாராயணனே இங்கு தங்கி, அப்பனாம்  சோமநாதப் பெருமானையும், அம்மையாம் வேயுறு தோளியம் பாளையும் தொழுதேத்திய புகழ்மிக்க தலமிது. பெரும் பதவிக்காரனாகிய தேவேந்திரனே உருவாக்கி, தொழுதேத்திய திவ்ய மூர்த்தியாம் இந்த சோமநாத மூர்த்தி. சகல பிறவிகளிலும் ஏந்திய  சாபங்களை, தோஷங்களை நீக்க வல்லவர். எந்த ஒரு இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அடிப்படையான காரணம் உண்டு. துக்கங்களைக் களையும்,  சங்கடங்களை நாசஞ் செய்யும் கருவூலமே இச்சோமநாதப் பெருமான். இதனை பதஞ்சலியார்,

‘‘வினைப்பயனை யறுத்தே பேரின்ப
முடன் ஆனந்த வாழ்வையீவான்
அருணமைந்தேத்திய யண்ணல் சடையன்
திருநீடூரமர் சோமகந்தன் - வேயுறு
தோளியம்பிகை தமை காரணாகம விதி
வழி போற்றி தஞ்சாப மறுபட்ட அருணனே
வேங்கை கதிர் பாய நின்றே’’

எனப் போற்றுகின்றார். ஆம். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதமான சூரியன் ஆதிக்கங் கொண்ட இத்திங்களில், சுவாமி மீது சூரிய ஒளி விழுகி ன்றது. நவகிரகங்கள் இல்லாத கோயில் இது. ஆனால், நவகிரகங்கள் ஒன்றிணைந்து, ஒரே தீர்த்தமாக, ‘ஒன்பது தீர்த்தம்’ என்றே போற்றப்படும்  புஷ்கரணி இங்குண்டு. நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்களையும் விலக்கும் திறன் கொண்ட புஷ்கரணி. சிவயோகர் தமது நூலில்,

‘‘மந்தனும் பருதியும் இன்னபிற
கோளால் கூடும் தோசப்பீடை
கருக்க இம்மேதினியிலே நவ
தீர்த்தமதனிலே நீராடி யெழு’’

என்றார். பற்பல கோயில்களில் பற்பல பூசை புரிந்தும் பயனின்றி போனாலும் சோர வேண்டியதில்லை. இங்குள்ள ஒன்பது தீர்த்த மெனும்  புஷ்கரணியில் நீராடி, இறைவனைத் தொழ விலகும் கோளால் எழுந்த பீடையே என்று பொருள். எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு, பின் பெரியோர்களின் ஆலோசனைப்படியே  காரியங்களில் ஈடுபடவேண்டும் என்பது நியதி. அதன்படி, இப்புண்ணிய தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற மூன்று  நிலைகளில் நிற்கின்றார். 

இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்று அழைத்தனர் சித்தர் முது மக்கள். படைக்கும் தொழில் புரியும் பிரம்மதேவர் உள்ளிட்ட மூர்த்தியரும் இம்மூன்று அம்சங்களையும் தியானித்தே தம் பணியில் கவனம் செலுத்து கின்றனர். எனவே, நாமும் இதனைப் பின்பற்றி செயல்பட்டால், குறைநீங்கி இன்பம் பெற ஏதுவாகும். இதனையே சிவஞானயோகியார்,

‘‘மும்மூர்த்தியர் தமக்கிணையான
சிந்தாமணிச் செல்வ மகாசிவானந்த
கணநாதரைத் தொழுதே எக்கருமமுந்
தோற்ற ஜெயமுண்டு பயமில்லை
யறிவீர் உலகத்தோரே’’
என்றார். 

காலை நேரத்தில் சிவபூசை புரிவது அவசியம். தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவலிங்கம் ஏதும் தென்படாது போக, காவிரி ஆற்றின் மணலில்  ஒரு சிவலிங்கம் செய்து, ஒரு பாடலைப் பாடி, சிவபெருமானின் நடன தரிசனம் வேண்டி பிரார்த்தித்தான். அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர  பகவானுக்கு நடன காட்சி தந்தமையால், ‘கான நர்த்தன சங்கரா’ எனக் கைகூப்பி இந்திரன் ஈசனை வழிபட்டான். அன்று தொட்டு இந்த  சோமநாதப்பெருமானுக்கு ‘‘கான நர்த்தன சங்கரன்’’ என்ற பெயர் உண்டாயிற்று. இந்த திவ்யமூர்த்தியை ஆவணிமாதம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில்  விரதமிருந்து தொழுபவர்க்கு, உடம்பில் உள்ள மச்சம் மறையும்; மாறாத வடு மாறும். தோலில் ஏற்பட்ட வெள்ளைப் புள்ளிகள், கருப்பு புள்ளிகள்  யாவுமே மறைந்தோடி வனப்பு பெறுவர். 
இதனை பாம்பாட்டிச் சித்தர்,

‘‘நஞ்சால் நேர்ந்த சரும ரோக
நிவாரணஞ் செய்குவன் - நர்த்தனச்
சங்கரனார் குட்டமெனும் ரோகந்தனையு
நீக்குமருத்துவ னென்று போற்றுவீரே’’

என்றே பேசுகிறார். பாம்பைப் போல, தனது ஆத்ம சக்தியை ஆட்டி பாம்பாட்டி என்ற பெயர் பெற்ற சித்தர் அருள் பெற்றது இத்திருத் தலத்தில் தான். மணலினாலான இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை இன்றும் காண, வியப்பு மேலிடுகிறதன்றோ? உற்சவருக்கு  சோமாஸ்கந்தர் என்று பெயர். மனதிற்கு பிடித்த மணவாளன் அமையவும், அமைந்த கணவரின் உறவினர்கள் தன்னோடு இன்புற்று இருத்தலுமே ஒரு பெண்ணிற்கு இன்பம் தருவது.  இதனை சிறிதும் குறையின்றி செய்யும் அப்பன், இந்த சோமாஸ்கந்தர்.

‘‘சோமகந்தரைச் சரணஞ்செயும்
பாவையர் தம் மனத்து சிம்மாசனம்
செய வீற்றிருக்க வைப்பான் மணவாளந்
தனையே - அவர்தங் குலத்தோரும்
மாட்டுப் பெண்ணை அகமிக மகிழச்
செயவே மகிழமென வடிவு தாங்கி
மாங்கல்யதாரண தேவதை நிற்க மெய்மையோதினமே’’ 

- என்றார் தேவனார். சிவயோக சித்தரான இவர் திருமாங்கல்ய பலம் தரும் தேவதை, மாங்கல்ய தாரண தேவதையான இவளே இத்திருத்தலத்து வி ருட்சமான ‘மகிழ’ மரமாகவும் நிற்கின்றாள் என்கிறார். இந்த விருட்சத்தை தொழுதக்கால், பூரிப்பெய்தி மகிழ்வான இல்லறம் கிடைக்கும் என்கிறது சி த்தர் தம் வாக்கு. 
காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள சக்தி படைத்த கோயில் இது. சுயமாகத் தோன்றிய மூர்த்தி, இந்த சோமநாதசுவாமி. இவர் கொலு விருக்கும் விமானம் இருதளம் எனப்படும் கீர்த்தி மிகு விமானம் ஆகும். நடராஜப் பெருமான் சுதை வடிவில் அமைந்தமை மெத்த சிறப்புடைத்தது. 

தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் கொடுவினைப் பயனால் நண்டாகப் பிறந்து, நாரதமுனியிடம் சாபவிமோசனம் வேண்ட, அவரும் சோமநாதரைச்  சரணடைய பணித்தார். அவ்வழியில் சிவதரிசனம் பெற்ற தன்மசுதன், சிவனிடம் ஐக்கியமானான். நண்டு சென்று சிவபெருமானிடம் ஐக்கியமான துளை  இன்றும் சிவ லிங்கத்தில் காணப்படுகின்றது. இதனையே அகத்தியன்,

‘‘கடக வடிவு நின்ற தன்மசுதனை தன்னுள்
கூட்டிய சோமேசன் - தன்னை சரணடைய
நிற்போர் தம் ஊழறுபடுஞ் சொன்னோம்
காளிகாம்பாள் தொழுதேத்திய மூர்த்திதமை
கை தொழுவாருக்கு இலை யாதொருவைரியரே’’       

எனப் பேசுகின்றார். பத்ரகாளியம்பிகை இச்சிவனை தொழுதே கைலாயம் சென்றாள். அன்னை பத்ரகாளியை தொழுபவர்க்கு எதிரிகள் இல்லை; மந்திர 
தந்திர வித்தைகள் சித்தியாகும் என்கிறது ஒரு பழம் பாடல். தெரிந்து அல்லது தெரியாமல் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக விளங்குபவர் இந்த ஈசன். எந்த ஒரு நோயும், தொல்லையும், நாம் செய்யும்  பாவங்களினால்தான் வருகின்றது என்கிறது சித்தர் தம் வாக்கு. அத்தோஷங்கள் விலக, நோய், தொல்லை, கஷ்டம் யாவும் இந்த சோமநாதரைத்  தொழுதால்  விலகும். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது இந்த நீடூர் கோயில்.

SHIVA / ANNAPORANI NEAR KANDIYUR

அந்த திவ்ய பக்த தம்பதியர் திருமடத்தின் முன் நின்று பஞ்சாட்சரத்தை சொல்ல சோற்றுத்துறையே நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை தம் மனச்சிறைக்குள் முடிந்து வைத்த தம்பதியர், நோக்கிய இடமெல்லாம் நாதனின் திருவுருவே எனும் இணையிலா நிலையில் ஒருநிலையாக நின்றனர். நாளும் அடியார்களுக்கு அன்னமிடும் வேலையே தாம் வையம் புகுந்ததின் பேறு என்று இனியர்களாக விளங்கினர். விரித்த கைகளில் எதுவுமற்று, இருப்பதெல்லாம் ஈசனுக்கே என ஈந்து ஈந்து உய்வுற்றனர். ஈசன் இன்னும் அவ்விருவரின் மகோன்னதத்தை மூவுலகும் அறியும் வண்ணம் விளையாடத் தொடங்கினார்.

ஆதவனை ஆதிசிவன் பார்க்க அவன் இன்னும் பிழம்பானான். தன் பிரகாசத்தை அப்பிரதேசம் முழுதும் பரப்பினான், சோற்றுத்துறையில் தீத்தாண்டவமாடினான். வருணன் வராது சோம்பிச் சிறுத்து மறைந்திருந்தான். ஆளுயர செந்நெற்கதிர்கள் கருகி அங்குலமாக குறுகி மக்கி மண்ணாகிப் போயின. பூமி பிளந்து நீரில்லாது வறண்டது. அடியார்கள் ‘சோழநாடே சோறுடைத்து என்பார்களே, வயல் வெளிகளெல்லாம் வாய்பிளந்து கிடக்கும் அவலமென்ன’ என கைதொழுது நின்றழுதனர். அருளாள தம்பதியர் தவித்தனர். நெற்கிடங்கு வெறுமையாவது கண்டு மனம் குமைந்தனர். தாங்கள் அன்னம் ஏற்காது போயினும் பரவாயில்லை, இறையடியார்கள் இன்னமுது செய்ய வேண்டுமே என கவலையில் தோய்ந்தனர். 

காலம் அதிவேகமாகச் சுழன்றது. சமையல் கலன்கள் காலிப் பானை களாயின. சோற்றுத்துறையே சோறுக்காக அலைந்தது. அருளாள தம்பதியர் மெய்வருந்தி, சோறுண்ணாது, துறையுள் உறையும் ஈசனின் சந்நதியே கதி என்று கழித்தனர். ராப்பகல் அறியாது கண்கள் மூடி தவமிருந்தனர். தீந்தவம் சுட்டெரிக்கும் சூரியனையே உரச, ஆதவன் ஓடி ஒளிந்தான். கயிலைநாதன் தம் அருட் கண்களை விரித்துப் பார்த்தான். குடம் குடமாக அரனின் அருளை கொட்டித் தீர்த்தான். அவ்விரு அடியார்கள் முன்பு எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரத்தை அவர்கள் முன் பரப்பினான், சோற்றுத்துறை சிவபெருமான். அன்னத்தை அட்சய பாத்திரம் பொங்கிப் பொங்கித் தந்தது. அந்த ஓதனத்தை சுரந்தது. 

அருளாள தம்பதியர் ‘ஓதன வனேசா... ஓதனவனேசா...’ என சொல்லி ஆனந்தக் கூத்தாடினர். (ஓதனம் என்றால் ‘அன்னம்’ என்பது பொருள்) மறைந்திருந்த வருணன் அதிவேகமாக வெளிப்பட்டான். அடை மழையால் ஆறுகளும், தடாகங்களும் நிரம்பி வழிந்தன. இயற்கை பொய்த்தாலும் தன் தாள் பணிய அரனின் அருள் துணை நிற்கும் என அந்த திவ்ய தம்பதியை முன்னிறுத்தி விளை யாடினார். அன்றி லிருந்து அட்சய பாத்திரம் கடலாகப் பொங் கியது. அவ்வூரை நெருங்கியோரை வயிறு நிறையச் செய்தது. 

சோற்றுத்துறைக்கு சிகரம் வைத்தாற் போல இன்னொரு விஷயமும் நடந்தேறியது. தவத்தில் ஆழ்ந்திருந்த கௌதம மகரிஷி சட்டென்று கண்கள் திறந்தார். தம் அகம் முழுவதும் சுயம்பு மூர்த்தியாக ஜொலித்த ஓதன வனேஸ்வரரைக் கண்டார். தாம் அங்கு அழைக்கப்படுவதை உணர்ந்தார். அடியார்களோடு சோற்றுத்துறையை விரைவாக நெருங்கினார். அருளாள தம்பதி, ஊராரோடு திரண்டு நின்று கௌதமரை கைதொழுது வரவேற்றனர். ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார், முனிவர். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூறினார். ஈசன் இன்னும் ஒருபடி மேலே போய் அவ்வூரையே சோற்றுக் கடலில் ஆழ்த்திவிடக் கருதினார். 

அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை தமது அருட் கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தன. நெல்மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பதைப் பார்த்த அடியார்களும், பக்தர்களும் ‘நமசிவாய... நமசிவாய...’ என விண்பிளக்க கோஷ  மிட்டனர். ஈசனின் பேரணை யாலும், கௌத மர் எனும் மகா குருவின் அண்மை யாலும் அவ்வூர் வள மாகத் திகழ்ந்தது. அதேநேரம், திருமழபாடியில் திருநந்திதேவரின் திருமண ஏற்பாடுகளில் தேவாதி தேவர்களும், கந்தர் வர்களும், ரிஷிகளும், சாமான்ய மனிதர்களும் கலந்து கொண்டனர். 

பூந்துருத்தியிலிருந்து மலர்கள் குவிய, வேதிக்குடியிலிருந்து வேதியர்கள் கூட்டம் கூட்டமாய் வர, சோற்றுத்துறையிலிருந்து அன்னம் குன்றுகளாக குவிக்கப்பட்டது. சோற்றுத்துறை நாதனின் அருள் மணம் அன்னத்தோடு இயைந்துக் குழைந்தது. அமுதமாக ருசித்தது. உண்டோர் பெரும்பேறுற்றனர். திருச்சோற்றுத்துறை சுடர்விட்டுப் பிரகாசித்தது. திருச்சோற்றுத்துறை, அழகிய கிராமம். நான்கு வீதிகளோடும், இரு பிராகாரங்களோடும் கிழக்குப் பார்த்த கோயில் இன்னும் எழிலாக்குகிறது. புராணப் பெருமையும், வரலாற்றுப் புகழும் கொண்ட திருச்சோற்றுத்துறைக் கோயில் இருதளக் கற்றளியாக சதுர விமானமுடன் எடுப்பித்திருக்கிறார்கள். முதலாம் ஆதித்த சோழன் திருப்பணி புரிந்திருக்கிறான். 

ராஜராஜ சோழனின் 15-ம் ஆட்சியாண்டின் போது அளிக்கப்பட்ட நிவந்தங்களை கல்வெட்டுகள் அழகாகப் பகருகின்றன. மேலும், நுளம்பர் காலக் கலைப்பணியை கண்ணுறும்போது இத்தலத்தின் தொன்மை பிரமிப்பூட்டுகிறது. கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கரு வறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதி அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும் மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு ‘அமுது செய்தீரா...’ என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது. 

அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்ற கோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது. இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழ்கிறார் ஓதனவனேஸ்வரர் எனும் தொலையாச் செல்வர். சமயக்குரவர் மூவர் பாடி பரவசமடைந்த தலம் இது. தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்பு லிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. 

வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன். நேர்த்தியான வடிவமைப்போடு திகழும் அழகுப் பிராகாரம். கருவறைக் கோஷ்டங்களில் தென்முகக் கடவுள் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து அமைதி தவழும் முகத்தோடு அருள்பாலிக்கிறார். திருமால் நின்று வழிபட்டதால் பிராகாரத்தில் நாராயணப் பெருமாள் விளங்குகிறார். அதேபோல உட்பிராகாரத் தில் அழகிய ஐயனார் சிலையும், தனிக்கோயில் மகாலட்சுமியும், பஞ்சபூத லிங்கம் என அழகே அணிவகுத்து நிற்கின்றனர்.  

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் அம்பாள் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். எழில் கொஞ்சும் தென்னந் தோப்பிற்கு நடுவே நின்றிருக்கிறாள் அன்னை. சோறூட்டும் அன்னையாதலால் இவள் ‘அன்ன பூரணி’யெனும் நாமத்தோடு திகழ்கிறாள். நெடிய திருமேனி கொண்டவள், குளிர் பார்வையால் மனதை நிறைக்கிறாள். கண்கள் மூடி கரம் குவிக்க வாஞ்சையோடு பார்க்கும் நாயகி. அன்னபூரணி அன்னம் மட்டுமல்லாது வாழ்வின் அனைத்தையும் அளிக்கும் பூரண சொரூபி. பசிப்பிணி தாண்டி பிறவிப் பிணியை அறுப்பவள் இவளே. இத்தலம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரி லிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

KEEZHAMBUR PERUMAL FOR UNITING COUPLE

அத்திரி முனிவருக்கு இரண்டு சீடர்கள் இருந்தார்கள். ஒருவன் முனிவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கங்கையில் நீராடுவதற்காக சென்றான். அடுத்தவனுக்கும் அவ்வாறே  நீராட ஆசைதான். ஆனால், குருவிற்குச் செய்ய வேண்டிய சேவைகள், தானும் இல்லாவிட்டால் பாதிக்குமே என்று தயங்கி, தன் ஆசையைத் தனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டான். ஆனால், முனிவருக்கு இந்தச் சீடனின் ஏக்கம் புரிந்தது. உடனே தன் தண்டத்தை எடுத்து தரையில் அடித்தார். அங்கேயே கங்கை நீர் ஊற்றாகப் பொங்கி, நதியாகப் பிரவாகம் எடுத்தது. முனிவர், வடக்கே ஓடும் கங்கையிலிருந்து நீரைக் கடனாகப் பெற்ற வகையில் இந்த நதி ‘கடனா நதி’ என்றழைக்கப்பட்டது. 

இந்நதியில் சீடன் நீராடி மன அமைதி பெற்றான். ஒருபோதும் வற்றாத ஆறு என்பதால் கடனா நதியைக் ‘கருணை நதி’ என்றும் அழைக்கிறார்கள். இந்நதியின் தென்பகுதியில் (வலப்புறம்) கீழாம்பூர் அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் பூமிதேவி - நீளாதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, அனுபவம். கல்வெட்டு செய்திப்படி ஆம்பல் பூக்கள் அதிகம் காணப்பட்ட ஊர் என்பதால் ‘ஆம்பலூர்’ என்று இத்தலம் அழைக்கப்பட்டிருக்கிறது. வடமொழியில் இவ்வூரை ‘சிநேகபுரி’ என்று சொல்கிறார்கள். சிநேகம் என்றால் அன்பு. புரி என்றால் ஊர். அன்பு+ஊர் அன்பூராகி பின்னர் பேச்சு வழக்கில் ஆம்பூராகியிருக்கிறது.

ஆம்பூர் மக்கள் முதலில் சன்யாசி மேடு என்னும் பகுதியில் வசித்து வந்ததாகவும் பின்னர் ஏற்பட்ட சேர-சோழ-பாண்டிய போர்களின்போது, கி.பி. 1500 வருடவாக்கில் மேற்கு நோக்கிச் சென்று, ஊரின் தெற்குப் பகுதியில் முதல் குடியிருப்பை அமைத்ததாகவும் சொல்கிறார்கள். பின்னர் ஊரின் வடபகுதியிலும் குடியிருப்புகள் உண்டாயின. முதலில் தெற்குத் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயமும், பின்னர் வடக்குத் தெருவில் பெருமாள் ஆலயமும் நிர்மாணிக்கப்பட்டன. இவ்விரு ஆலயங்களுக்கும் நடுவில் பொதுவாக சிவன் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி, அம்பாளும் அருள் பாலிக்கிறார்கள். ஊரின் வடபகுதியில் முதலில் விநாயகப் பெருமானுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. 

தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் பெயர் வெங்கடேசப் பெருமாள். தாயார்கள், பூமிதேவி-நீளாதேவி. பெருமாளின் வலதுபுறம் பூமாதேவியும் இடதுபுறம் நீளாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மூலவர் சந்நதிக்கு எதிரே கருடாழ்வார் காட்சி தருகிறார். வெளி பிராகாரத்தில் வேப்ப மரத்தடியில் நாகப் பிரதிஷ்டைகளும் உள்ளன. கீழாம்பூரில் சத்திரத்தை ஒட்டிய பகுதியில் எடுக்கப்பட்ட கல்வெட்டில் வட்டெழுத்தில் ஒரு பாடல் இருக்கிறது. வேணாட்டு அரசன் ரவிவர்மனைக் குறித்த செய்தியும் உள்ளது. கேரள அரசன் தன் மனைவியிடம் கோபம் கொண்டு அவளை விட்டு நீங்கியிருந்ததாகவும் பின்னர் கீழாம்பூரிலுள்ள தெற்குத் தெருவில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து, அவர் அருளால் ஒன்று சேர்ந்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஆலகால விஷத்தைச் சிவபெருமான் உண்டார். இதனைப் பார்வதி தேவிக்குத் தெரிவிக்க உடனே புறப்பட்டார், நீளாதேவி. தன் கணவரின் தங்கையாகிய பார்வதியிடம்  நீளாதேவி விவரம் சொல்ல, ஓடோடி வந்த பார்வதி, சிவபெருமானின் கழுத்துப் பகுதியைப் பிடிக்க, அவர் நீலகண்டரானார். அவ்வாறு நீளாதேவி உடனடியாகப் புறப்பட்ட காரணத்தால், இக்கோயிலில் வெங்கடேச பெருமாள் மற்றும் பூமிதேவி சிலைகளைவிட நீளாதேவி சற்று முன்னே அமைந்திருக்கிறார். கடன் தொல்லையிலிருந்து விடுபட இந்த வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு வந்து வளர்பிறை சதுர்த்தியன்று ஹோமங்கள் செய்தால் கடன் தொல்லை நீங்கும்; 

வேகமாகப் புறப்படும் தோரணையில் முன் வைத்த காலுடன் நிற்கும் நீளாதேவியை வேண்டி வழிபட்டால் குபேர யோகம் உண்டாகும்; அனைத்து வியாதிகளும், விஷ சம்பந்தமான நோய்களும் இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு எளிதாக நீங்கும்; கணவன் - மனைவியிடையே கருத்து வேற்றுமை இருந்தாலோ அல்லது விவாகரத்து வரை செல்லும் வழக்காக இருந்தாலோ, இக்கோயிலில் வந்து வழிபட்டால், வேணாட்டு அரசன் ரவிவர்மனுக்கு மனைவியோடு மீண்டும் சேரும் பாக்கியம் கிடைத்ததைப் போன்ற நற்பலன்கள் கிட்டும் என்கிறார்கள்.

மூலவர் கருவறையில் காட்சி தருவதுபோலவே, பூமிதேவி-நீளாதேவியுடன் அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாகவும் தரிசனம் தருகிறார். மணிமண்டபம் இரண்டு மணிகளைக் கொண்டதாக உள்ளது. இங்குள்ள வலப்புற தூணில் யோக நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் மூலவரை நோக்கியபடி கருடாழ்வார் கொலுவீற்றிருக்கிறார்.  கோயிலைச் சுற்றி பிராகாரத்தில் பலவகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வில்வ மரம் வான்நோக்கி வளர்ந்துள்ளது. கோயிலின் வலப்புறம் அமைந்துள்ள கிணற்றை ஒட்டிக் கீழ்பகுதியில் நெல்லி மரமும், வேப்ப மரமும் உள்ளன. 

இவ்விரண்டு விருட்சங்களுக்கும் கார்த்திகை    ஞாயிற்றுக் கிழமைகளில் பூஜை  நடப்பதுண்டு. நெல்லி மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோயிலில், பித்தளை நாகருடன் காட்சி தரும் தேக்கு மரத்தாலான சேஷ வாகனம் உள்ளது. பித்தளை வார்ப்புடன் கூடிய கருட வாகனமும் உண்டு. சிறியதாக ஒரு கேடயமும் உள்ளது. குபேரன், இந்திரன், சுதர்சன பாண்டியன் மற்றும் சிநேகபுரியான் என்றழைக்கப்படும் கேளையப்பன் போன்றோர் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டிருக்கிறார்கள்.

மன்னன் சுதர்சன பாண்டியன், பிள்ளைப் பேறு இல்லாமல் பல காலம் வேதனைப்பட்டான்.   ஆம்பூர் வெங்கடேசப் பெருமாள் கீர்த்தியைக் கேள்விப்பட்ட இம்மன்னன், இவ்வூருக்கு வந்து வாசம் செய்து, அசுவமேத யாகம் செய்தான். வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து யாகத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு, முறைப்படி யாகத்தைத் தொடங்கினான். அவனுடைய பக்தியின் ஆழத்தை சோதிக்க விரும்பினார் ஈசன். உடனே தன் மகன் சுப்ரமணியரை அனுப்பி, மன்னனின் அசுவமேத யாகக் குதிரையைக் கட்டச் சொன்னார். 

அவர் உத்தரவுப்படியே சுப்ரமணியர் செய்ய, வெகுண்டான் மன்னன். முழுமை பெறாத யாகத்தால், சுப்ரமணியரால் ஏற்பட்ட இடையூறால், தன் எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று பதைபதைத்தான். ஆகவே, யாகக் குதிரையைக்  கட்டி வைத்திருப்பவர் யார் என்று உணராமல், கோபத்துடன் சுப்ரமணி யருடன் போரிட முன் வந்தான். அவரும் அவனை எதிர்கொண்டார். ஆனால், தனக்கு எதிரியாக எதிரே நிற்பவர் முன், தான் பலமெல்லாம் இழந்ததை உணர்ந்தான் மன்னன். தான் போரிடுவது தெய்வாம்சத்துடன்தான் என்பதை உடனே புரிந்துகொண்டான். 

அதே சமயம் ஒரு பேரொளி தோன்றி, அவனை ஆட்கொண்டு, ஆசியளித்தது. அது ஈசனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்துகொண்ட பாண்டியன், சிவசைலநாதரையும், சுப்ரமண்யரையும் உளமாற வணங்கினான். வாயாரப் புகழ்ந்தான். அவர்களுடன் சிநேகமானான். அதன் பலனாக அவர்களிடம் ஆசி பெற்று, நேராக வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்தான். சிவ - வைணவ ஒற்றுமைக்கு இந்தத் தலம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

சுதர்ஸன பாண்டியன் சிவசைலநாதரிடம் அருள் பெற்று, பின்னர் பெருமாளிடம் தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்துகொண்டதை நினைவுபடுத்தும் வகையில், உற்சவர் சிவசைலநாதர் கீழாம்பூருக்கு (சிநேகபுரி) வரும்போது, அவருக்கு அனைத்துவிதமான மரியாதைகளையும், வடக்குத் தெரு மற்றும் தெற்குத் தெருவிலுள்ள இரண்டு பெருமாள் கோயில்களில் அளிக்கப்படுகின்றன. கீழாம்பூருடன் தொடர்புடையது சிவசைலநாதர் ஆலயம். சிவசைலத்தில் குடிகொண்டுள்ள ஈசன், அன்னை பரமகல்யாணியுடன் காட்சி தருகிறார். 

கீழாம்பூரில் வடக்குத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டு, அசரீரி வாக்குப்படி சிவசைலத்தில் அம்பாளாய்ப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் அன்னை. ஆம்பூர்-ஆழ்வார்குறிச்சி மக்கள் கொண்டாடும் தெய்வமான சிவசைல நாதர், தன் மனைவி பரமகல்யாணியுடன் மறுவீட்டிற்காகக் கீழாம்பூருக்கு மே மாதம் வரும் வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வஸந்த உற்சவம் மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாள் ஊருக்கு வருகை புரிந்து ஊர் பவனி வந்து, முதன் முதலில் தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் கோயிலில் (தன் அண்ணன் வீட்டில்!) இளைப்பாற்றிக் கொள்கிறார் அம்பாள். 

நைவேத்தியம், தீபாராதனைகளை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் வடக்குத் தெரு பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்கே பல அபிஷேகங்களைக் கண்டு, இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு மூன்றாம் நாள் காலை தன் நாதருடன் சிவசைலம் சென்றடைவார், ஊர் மகளான பரமகல்யாணி. சிவசைலநாதரும் வெங்கடேசப் பெருமாளும் இணைந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலமான கீழாம்பூர், தென்காசி-அம்பாசமுத்திரம் பஸ் மார்க்கத்தில் (ரயில் மார்க்கத்திலும்) ஆழ்வார்குறிச்சிக்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது.