Thursday 5 December 2013

தானங்களில் உயர்ந்தது கல்விதானம், அடுத்து அன்னதானம். இதையடுத்து குடை, காலணி தானம் என்கிறது ஒரு கதை.
பரசுராமரின் தந்தை ஜமதக்னி அம்பு எய்வதில் கெட்டிக்காரர். அவர் அம்பு வீசும்போது, கீழே விழுபவற்றை அவரது மனைவி ரேணுகாதேவி எடுத்து வருவாள். ஒருமுறை அவர் வீசிய அம்புகளை எடுத்து வர தாமதமாயிற்று.
""ஏன் தாமதமாக வந்தாய் தேவி?'' என்றார் ஜமதக்னி.
""நாதா! சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதன் காரணமாக அந்த மரநிழலில் சற்று நின்று இளைப்பாறி வந்தேன்,'' என்றாள்.
ஜமதக்னிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. தன் வில்லை சூரியனை நோக்கித் திருப்பினார்.
""சூரியனே! உலகோரை சுட்டெரிப்பதற்கும் ஒரு அளவில்லையா?'' என்று கேட்டு பாணத்தைத் தொடுக்கும் முன், சூரியன் கீழே வந்துவிட்டான். ஜமதக்னியை சரணடைந்தான். ஒரு குடையையும், காலணிகளையும் ரேணுகாதேவிக்கு கொடுத்து, வெயிலில் இருந்து காத்துக் கொள்ளும்படி வேண்டினான்.
கோடையோ, மழையோ குடையும், காலணியும் தானமாகக் கொடுத்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment