முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார்.
அவருடன் அவருடைய நாயும் இருந்தது.
வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார்.
முல்லா, ''நாய் நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,'' என்றார்.
மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை,' 'முல்லா, உன் நாய் அழகாக இருக்கிறது.
அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும். ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்?
தயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,'' என்றார்.
முல்லா வைத்தியரின் காதருகே குனிந்து, ''நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும், யாரிடமும் சொல்ல வேண்டாம்.
நாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார்.
எனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது.
எனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன்.
ஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும்.
அதற்காகத்தான் இந்த ஏற்பாடு,'' என்றார்.
அவருடன் அவருடைய நாயும் இருந்தது.
வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார்.
முல்லா, ''நாய் நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,'' என்றார்.
மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை,' 'முல்லா, உன் நாய் அழகாக இருக்கிறது.
அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும். ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்?
தயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,'' என்றார்.
முல்லா வைத்தியரின் காதருகே குனிந்து, ''நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும், யாரிடமும் சொல்ல வேண்டாம்.
நாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார்.
எனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது.
எனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன்.
ஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும்.
அதற்காகத்தான் இந்த ஏற்பாடு,'' என்றார்.
ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.
முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.
“ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்
அந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை.இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.
நேரம் போய் கொண்டே இருந்தது.
அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.
இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.
அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது
ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் , இந்த கனத்தில் வாழ்வதில்லை
முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை.
''என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,''
என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார்.
ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.
பின் திருப்தியாக,' 'இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,'' என்றார்.
ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.
பின் திருப்தியாக,' 'இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,'' என்றார்.
மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம்.
பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!.
நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்க்க வேண்டும்
முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார்.அவரது மனைவி,”கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்” என்றாள்.உடனே முல்லா பதிலளித்தார்,”அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்!! ந்ம்பிக்கையே வாழ்க்கை
மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.
முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.
இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.
மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.
கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.
கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.
மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.
பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.
நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.
ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.
முல்லாவில் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” ... என்றார்.
முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே அமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”... என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாக முடிந்த மகிழ்ச்சியில் ” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு நான் போவது ?” என்று கேட்டார்
ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார்.
அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா விசாரித்தார்.
நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா ? என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.
உங்கள் சந்தேகம் என்ன ? என்று முல்லா கேட்டார்.
உண்மை .. .. ..
உண்மை என்ற எல்லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன ? என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார்.
முல்லா பெரிதாகச் சிரித்தார், இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா ? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ - பேசவோ - செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
No comments:
Post a Comment