Wednesday, 16 April 2014

NAVAGRAHA PAATHUHA MANTHRAM

துர்க்கைச் சித்தர் அருளிய கிழமைகளும் பரிகாரங்களும்

கிழமைகளும் பரிகாரங்களும் என்ற இந்த சிறிய நூல் உங்கள் எல்லோருடைய வாழ்க்கைக்கும் வழிகாட்டும் பெரிய துணைக்கரம்! பலருக்கு அவரவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை. எனவே, அன்றாட வாழ்க்கைக்கு கிரஹங்களுக்குப் பரிகாரங்கள் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பிறந்த கிழமை தெரிந்தால் அந்தந்த கிழமைகளில் ஏற்ற பரிகாரங்களைச் செய்து கொள்வதினால், உங்கள் வாழ்க்கையில் உங்கள் கிரஹங்கள் உங்களுக்குத் துணை செய்வதாக அமையும்.

ஏழு கிழமைகளுக்கும் ஏற்ற பரிகாரங்கள் உங்கள் எல்லோரையும் கைதூக்கிவிடும் பரிகாரங்கள். உங்கள் மனக் கலக்கங்ளைத் தீர்த்து வைக்கும் பரிகாரங்கள்; அவரவர் பிறந்த கிழமைகளில் இந்த பரிகாரங்களையும் தெய்வ வழிபாடுகளையும் செய்து, மேலும் மேலும் நலமும் வளமும் பெற்று வாழ நல்லாசிகள்!

ஞாயிறு

மித்திரா ரவியே மிடியினை தீர்ப்பாய்
வித்தகா பாஸ்கரா விரிசுடர் ஆழியால்
சித்தமே நினைத்திட செயம் தரு ஸ்ரீதரா
இத்திரை வலம் வரு இந்திரா போற்றியே!

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் பரிஹார பரிமளம்

ஞாயிறன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்திருக்க வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு. ஆதித்ய ஹ்ருதயம் பாராயணத்துக்கு உகந்தது. அன்று கோதுமையில் செய்த பண்டங்களையோ (அ) பாயசத்தை சூரிய பகவானுக்கு நிவேதனம் செய்வது ஆயுள் விருத்திக்கு உகந்ததாகும்.

வெளிர் மஞ்சள நிற ஆடைகளைப் பிராமணர்களுக்குத் தானம் செய்வது சிறப்பானது. சிவன் கோயிலில் ஆதித்ய ஹ்ருதயத்தைச் சொல்வது மிகவும் நல்லது. தன்னைவிட வயது முதிர்ந்த சிவ பூஜகர்களை நமஸ்கரிப்பதும், அவர்களுக்கு ஏற்றவைகளை வழங்குவதும் சிறப்பு.

ஏற்றமலர்கள் : வெளிர் மஞ்சள் நிறப் பூக்கள், சாமந்தி, கொழுக்கட்டை மந்தாரை.
ஏற்ற நிவேதனங்கள் : குட பாயசம், சர்க்கரைப் பொங்கல், பால் சாதம், மதுவர்க்கம்.

திங்கள்

சோமனே சுத்தனே சோர்விலாச் சோதியே
காமனை எரித்தவன் தலைமுடி தாங்கிய
நாமனே நகைமுக நங்கையின் நாயகா
நேமனே நிறைதல நேசனே போற்றியே!

திங்கட்கிழமை பிறந்தவர்கள் பரிஹார பரிமளம்

மாலை நேரத்தில் உணவு அருந்தக்கூடாது. வேதம் அறிந்தவர்களுக்குத் தூய வெள்ளை வேஷ்டியைத் தானம் செய்வது நல்லது. அன்று அதிகாலை தாயை நமஸ்கரிப்பது மிகச் சிறப்பு; இயலாதவர்கள் மனதிலாவது தாயாரை நமஸ்கரிக்கவும்.

திங்கட்கிழமை மாலையில் தேவி கோயில்களில் வழிபாடு செய்வது சிறப்பு. சிறந்த வழிபாட்டு நூல் துர்க்கா சந்திரகலா ஸ்துதி மனோன்மணி, சோடக விருத்தம். வெள்ளை நிறப் பூக்களால் அர்ச்சித்து, வெள்ளை கற்கண்டு பொங்கல் நிவேதனம் செய்வது சிறப்பானது. சிவ அபராத ஷமாபன மந்திர ஜபங்களைச் சொல்வது, காளை மாட்டுக்குப் புல் தானம் செய்வது, கடலை பிண்ணாக்குக் கழிவு, உளுந்து கழுவிய தண்ணீர் இவை ஏற்ற பரிகாரங்கள். சிறந்த நைவேத்தியம் : சீரகம், மிளகு கலந்த சம்பா சாதம்.

ஏற்ற மலர்கள் : வெண்மை நிற நந்தியாவர்த்தம், வெள்ளிலோத்தி, வெள்ளை சாமந்தி, முல்லை, வெண்தாமரை, மல்லிகைப்பூ, சம்பங்கி, அடுக்கு மல்லிகைப்பூ.
ஏற்ற நிவேதனங்கள் : தயிர் சாதம், பால் பாயசம், பால் சாதம், கற்கண்டு சாதம், சம்பா சாதம்.

செவ்வாய்

மங்கள குமரனே மணந்தரு சக்தியே
அங்கார கனெனும் அழகு செவ்வண்ணனே
பொங்கிட நலத்துடன் பொருள்நிலம் அளித்திடும்
எங்களின் இதயனே இன்பனே போற்றியே!

செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் பரிஹார பரிமளம்

இக்கிழமையில் பிறந்தவர்கள் அன்று ஒருமணி நேரமாவது மவுனம் கடைப்பிடிப்பது சிறப்பு. வேதம் அறிந்தவர்களுக்கு துவரை (அ) துவரம் பருப்பு தானம் செய்வது சிறப்பானது. ஹரித்ரா அன்னம் என்கிற துவரம் பருப்பு, மஞ்சள் தூள் கலந்த ஹரித்ரா அன்னத்தை தேவிக்கு நிவேதனம் செய்து கன்னிப்பெண்கள், சுமங்கலிக்குக் கொடுத்து வந்தால் விவாக தடங்கல்கள் நீங்கும். இதுபோலவே முதிர்ந்த வாழப்பூவை முருகன் சன்னதியில் சமர்ப்பித்தல் நல்லது. மஞ்சள் நிற மேல்துண்டு அணிவது சிறப்பு. செவ்வாய் கிரக மங்களாஷ்டக பாராயணம் ஏற்புடையது. காலையில் முருகனையும், மாலையில் பைரவரையும் வழிபடுபவர்கள் செவ்வாய் தோஷ பிடியிலிருந்து விடுபடுவார்கள்.

ஏற்றமலர்கள் : மஞ்சள் சாமந்தி, தங்க அரளி, மஞ்சள் அரளி, மாசிப்பச்சை
ஏற்ற நிவேதனங்கள் : ஹரித்ரா அன்னம் (மஞ்சள் சாதம்) சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கடலைப் பருப்பு சுண்டல், எலுமிச்சை பழ சாதம், நார்த்தம் பழ சாதம்.

புதன்

புண்ணியப் புதனே புகலென பணிந்தேன்
கண்முனே கனிந்துநீ கருணையாய் ஒளி விடு
பண்ணிடும் செயல்களின் பலனெனப் பலநலம்
மண்ணினில் அருள்வாய் மலரடி போற்றியே!

புதன்கிழமை பிறந்தவர்கள் பரிஹார பரிமளம்

புதன்கிழமை பிறந்தவர்கள் துளசி, மருபச்சை இலைகளை விஷ்ணுவிற்கும், கிருஷ்ணருக்கும் அர்ச்சனை செய்வது சிறப்பு. சிறப்பான நைவேத்யம் பாசிப்பயறு பொங்கல், பாசிப்பயறு சுண்டல். இவர்கள் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்திருந்து தெய்வ சிந்தனையோடு வாழ்க்கையைத் துவங்குவது நல்லது. பாசிப்பயறு (அ) சுண்டல் இவைகளை விஷ்ணு கோயில்களில் பட்டாச்சாரியார் அல்லது வரும் பக்தகோடிகளுக்கு வழங்கினால், புத கிரஹ பீடை குறையும். சிறப்பான பாராயணம் விஷ்ணு சகஸ்ரநாமம் (அ) கிருஷ்ணாஷ்டகம். இவர்கள் பச்சை கலரில் துண்டு அல்லது கைக்குட்டை, பச்சை கலர் பேனா இவைகளை வைத்துக் கொள்வது நல்லது.

ஏற்றமலர்கள் : துளசி (விஷ்ணு துளசி) மாசிப்பச்சை, கதிர்ப்பச்சை, தவனம் (மருக்கொழுந்து), மருவுபத்ரம்.
ஏற்ற நிவேதனங்கள் : பாசிப்பருப்பு சாதம், பாசிப்பருப்பு, சர்க்கரைப் பொங்கல், பாசிப்பருப்பு உருண்டை, பாசிப்பருப்பு பாயாசம்.

வியாழன் 

குருவெனும் பிரகஸ்பதி குறைகளை தீர்ப்பார்
திருவொடு நலம்பல தினம் தினம் சேர்ப்பார்
பெருமன வியாழனே பெருந்தவ - அந்தணா
நறுமலர் பாதனே நம்பினேன் போற்றியே!

வியாழக்கிழமை பிறந்தவர்கள் பரிஹார பரிமளம்

வியாழக்கிழமை பிறந்தவர்கள் கண்டிப்பாக பிரும்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். இவர்களது சிறந்த பாராயணம் பிரகஸ்பதி ஸ்தோத்திரங்கள். இவர்களுக்குச் சிறப்பான வஸ்திரம் தூய வெள்ளை. நெற்றியில் திருநீறு அணிவது சிறப்பு. கொண்டைக்கடலை சுண்டல் சிறப்பான நைவேத்தியம். மல்லிகை, முல்லை, நந்தியாவர்த்தம் இவைகள் சிறப்பான புஷ்பங்கள்.

அதிகாலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தட்சிணாமூர்த்தி அஷ்டகம் சிறப்பான பாராயணங்கள், பரிகாரமாக கொண்டைக் கடலையை வெள்ளை, மஞ்சள் துணியில் கட்டி வேதம் அறிந்தவர்களுக்குத் தானமாகக் கொடுப்பது சிறப்பானது (பிரகஸ்பதி கிரஹ பரிகாரத்தைத் தட்சிணாமூர்த்திக்குச் செய்வது சிறப்பு அல்ல). அதைப் பிரகஸ்பதிக்கே செய்ய வேண்டும். (குரு)

ஏற்ற மலர்கள் : நந்தியாவர்த்தம், முல்லை, மல்லிகை, சம்பங்கி.
ஏற்ற நிவேதனங்கள் : தயிர் சாதம், நெய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல்.

வெள்ளி

கலைகளின் தந்தை நீ கண்ணி னின்ஒளியும் நீ
நிலைதரும் வெற்றியின் நித்திய தலைவன்நீ
மலைமகள் அடியவா மலர் தவழ்மார்பனே
தவத்தொளிச் சுக்கிரா சந்ததம் போற்றியே!

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் பரிஹார பரிமளம்

வெள்ளிக்கிழமை என்ற சுக்கிர வாரத்தில் பிறந்தவர்கள், வெள்ளிக்கிழமை மாலை 5.30லிருந்து 6.30வரை ஒரு மணி நேரம் மவுனம் கடைப்பிடிப்பது சிறப்பு. இக்காலங்களில் கடன் வாங்குவது கூடாது. அதாவது திரவிய செலவுகள் கூடாது. சொந்த இல்லத்தில் பூஜை அறையில், வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி அவர்கள் ஏற்றுவது சிறப்பு. சிறப்பான பாராயணம் சுக்கிர கிரஹ சம்பந்தப்பட்டது. இராஜராஜேஸ்வரி அஷ்டகம், லலிதா திரிசதி போன்றவை பாராயணத்துக்கு ஏற்றவைகள். சிறப்பான நைவேத்யம் பால் சர்க்கரை பொங்கல், திரி மதுரம் (பால்-பழம்-தேன்).

ஏற்றமலர்கள் : செந்தாழைப்பூ, நித்தியமுல்லை, மனோரஞ்சிதம், செந்தாமரை புஷ்பம், செண்பகப்பூ
ஏற்ற நிவேதனங்கள் : சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், பால் கலந்த பஞ்சாமிர்தம், திரட்டுப்பால் மற்றும் பாலில் செய்த பண்டங்கள்.

சனி

காகத்தின் மீதினில் கருணையாய் வருபவர்
சோகமே தீர்த்து சுகமது தருபவர்
மோகமும் மூடமும் மோசமும் தீர்ப்பவர்
வேதனே மந்தனே வேண்டினேன் போற்றியே!

சனிக்கிழமை பிறந்தவர்கள் பரிஹார பரிமளம்

சனிக்கிழமை பிறந்தவர்கள் கண்டிப்பாகக் காலையில் பல் துலக்கியவுடன் காக்கைக்குக் கோதுமையால் செய்த பிஸ்கட், பன், பிரட் இவைகளை கிருஷ்ணா என்று காகத்தை அழைத்து உணவு அளிப்பது சிறப்பு. முதல் நாள் சமைத்த சோறு, பழம் பண்டங்களை காக்கைக்கு இடக்கூடாது. இவர்கள் தலையில் ஒரு விரலால் எண்ணெய் வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்வது சிறப்பு. சிறந்த நைவேத்தியம் எள்ளு சாதம் என்கிற எள்ளோதரை, சிமிழி உருண்டை என்கிற எள்ளுப்பொடி உருண்டை சிறப்பான தானம். சிறிது எள் கலந்த புளியஞ்சாதம் (அ) சிறிது எள் கலந்த நெய் சாதம். கண்டிப்பாக சனிக்கிழமை மாலை சிவதரினசம் செய்வது சிறப்பு. சிவன் கோயிலில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவது சிறப்பு. சிறந்த புஷ்பம் வில்வம், வன்னி, நீல சங்கு புஷ்பம், நீலாம்பரம், நீலவண்ண சொக்காய், பேனா, கைக்குட்டை இவைகள் சிறந்த திருஷ்டி தோஷ நிவாரணங்கள்.

ஏற்ற மலர்கள் : நீல சங்கு புஷ்பம், நீலாம்பரம், வன்னிபத்ரம், மஹா வில்வம், நீல அல்லி.
ஏற்ற நிவேதனங்கள் : கருப்பு எள்ளு சாதம், கருப்பு எள்ளு உருண்டை, கருப்பு எள்ளுப் பொடி, சிமிழி உருண்டை, எள்ளு கலந்த கடலைப் பருப்பு பாயசம்.
ரங்கநாத திவ்யமணி
பாதுகாப்யாம் நம:
கநகருசிரா காவ்யாக்யாதா சநைஸ்சரணோசிதா
ச்ரிதகுருபுதா பாஸ்வத்ரூபா த்விஜாதிபஸேவிதா!
விஹித விபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே
த்வமஸி மஹதீ விச்வேஷாம் ந: சுபா க்ரஹமண்டலீ!!
இந்த ஸ்லோகத்தில் சூரியன் முதலிய ஏழு பிரதான கிரகங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. சாயா கிரஹங்களான ராகு, கேதுக்களுடைய மந்திரங்களின் பீஜாக்ஷரங்கள் வைக்கப்பட்டிருப்பதனால், இந்த ஸ்லோகத்தை குறைந்தது ஒன்பது முதல் பத்து தடவைக்கு மேல் ஜபம் செய்தால் ஒன்பது கிரகங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விலகி இன்பம் அடையலாம்.
ஒரே சுலோகத்தில் நவக்ரஹ த்யானம்
ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர:
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமிஸுத: ஸுதாம் சு தயை:
ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
காம்ய: கோமள வாக் விலாஸ மதுலம்
மந்தோ முதம் ஸர்வதா
ராஹுர்பாஹுபலம் விரோத சமனம்
கேது: குலஸ்யோன்ன திம்.
பீடாஹர நவக்ரஹ ஸ்தோத்ரம்
1. க்ராஹாணாமாதி ராதித்யோ லோகரக்ஷ ணகாரக
விஷமஸ்தான ஸம்பூதாம் பீடாம் ஹரது மே ரவி:
2. ரோஹிணீச: ஸுதாமூர்த்தி ஸுதாகாத: ஸுதாசன:
விஷமஸ்த்தான ஸம்பூதாம் பீடாம் ஹரது மே விது:
3. பூமி புத்ரோ மஹாதேஜா ஜகதாம் பயக்ருத் ஸதா
வ்ருஷ்டிக்ருத வ்ருஷ்டி ஹர்தா ச பீடாம் ஹரது மே குஜ:
4. உத்பாத ரூபோ ஜகதாம் சந்த்ர புத்ரோ மஹாத்யுதி:
ஸுர்யப்ரியகரோ வித்வான் பீடாம் ஹரது மே புத:
5. தேவமந்த்ரீ விசாலாக்ஷ: ஸதா லோகஹிதேரத:
அநேக சிஷ்ய ஸம்பூர்ண: பீடாம் ஹரதுமே குரு:
6. தைத்ய மந்த்ரீ குருஸ் தேஷாம் ப்ரணதச்ச மஹாமதி:
ப்ரபுஸ்தாரா கிரஹாணாம்ச பீடாம் ஹரதுமே குரு:
7. ஸூர்ய புத்ரோ தீர்கதேஹோ விசாலாக்ஷ: சிவப்ரியே:
மந்தசார: ப்ரஸன்னாத்மா பீடாம் ஹரதுமே சனி:
8. மஹாசிரா மஹாவக்த்ரோ தீர்க்க தம்ஷ்ட்ரோ மஹாபல:
அதனுச் சோர்த்வ கேசஸ்ச பீடாம் ஹரதுமே தம:
9. அநேக ரூபஹணைச்ச சதசோ ஸஹஸ்ரச:
உத்பாத ரூபோ ஜகநாதம் பீடாம் ஹரது மே சிகீ
நவக்ரஹ ஸ்தோத்ரம்
(ஒன்பது கிரஹங்களுக்கும் பொது)
ஸுர்யாய சீதருசயே தரணீஸுதாய
ஸெளம்யாய தேவகுரவே ப்ருகுநந்தனாய
ஸுர்யாத்மஜாய புஜகாய ச கேதவே ச
நித்யம் நமோ பகவதே குரவேவராய
நமஸ் ஸூர்யாய ஸோமாய மங்களாய ச புதாய ச
குருசுக்ர சநிப்யஸ்ய ராஹவே கேதவே நம
(வேறு)
ஓம் ஹ்ரீம் ஆதித்யாய ஸோமாய மங்களாய ச புதாய ச
குரு சுக்ர சநிப்யஸ்ச ராஹவே கேதவே நம
(வேறு)
சூரியன், சோமன், செவ்வாய்
சொற்புதன், வியாழன், வெள்ளி
காரியும் இராகு கேது
கடவுளர் ஒன்பா னாமத்
தாரியல் சக்க ரத்தைத்
தரித்திரர் பூசித் தாலும்,
பாரினில் புத்திரர் உண்டாம்
பாக்கியம் நல்கும் தானே!
(ஒரே ஸ்லோகத்தில் இந்த நவக்கிரக ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வோர் நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்கள், பீடைகள், தரித்திரங்கள் பல நம்மை விட்டு விலகி, ராஜயோகம் அடைவர். ஒரே ஸ்லோகத்தில் நவக்கிரகங்களின் பலன் நமக்குக் கிடைக்கும்.)
நவக்ரஹ தலங்கள்
செங்கதிரோன் சூரியனார்
கோயில் குடிகொண்டார்
திருவேங்கடவன் திருப்பதியில்
திங்களென நின்றார்
அங்காரகன் ஆவினன் குடி
தண்டபாணி ஆனார்
அரிய புதன் சொக்கரென
ஆலவாயமர்ந்தார்
தங்க குரு செந்தூரில்
சுப்பிரமணிய மானார்
தனியரங்கில் சுக்கிரனாய்
திருவரங்கர் ஆனார்
பொங்கு சனி திரு நள்ளாற்றில்
திருக்கோயில் கொண்டார்
பெரியராகு, கேது இவர்கள்
காளத் தீசர் ஆனார்.
நவக்கிரகப் பிரார்த்தனை
ஆதவன் சுகமும் சந்திரன் புகழும்
அங்காரகனாகிய பூமி சுதன் நிதியும்
மாதவ புதனறிவும் குரு கௌரவம்
வழங்கிட சுக்கிரன் வாக்கதும் வழங்க
சாதனை மகிழ்வை சனியவர் நல்க
சக்தியாம் வலிமையை ராகு வழங்கிட
ஓதிடும் புலமை கேதுவே நல்க
உலகினில் மானுடம் வாழ்க எந்நாளும்.
(வேறு)
ஆதியே உனைத் தொழுதேன்
ஐஸ்வர்யம் பெருகத் தொழுதேன்
சந்திரா உனைத் தொழுதேன்
சந்தோஷம் பெருகத் தொழுதேன்
சூரியா உனைத் தொழுதேன்
சூழ்வினைகள் நீங்கத் தொழுதேன்
கதிரேசா உனைத் தொழுதேன்
கண்ணும் கருத்தும் விளங்கத் தொழுதேன்
மஹாதேவா உனைத் தொழுதேன்
மாங்கல்யம் பெருகத் தொழுதேன்
ஒத்ததிட்டேரி உலகம்வலம் வந்த
சித்தத்தை நோக்கியே
சிவ சூரிய நாராயணமூர்த்தியே நம:
சுபம் தருக
மூலத்தில் கதிரவனும் ஸ்வாதிஷ்டான
முற்றத்தில் சந்திரனும் மணி பூரகத்தில்
சீலமிகு அங்காரகனும் அநாகத்தில்
சேர்புதனும் விசுத்தியிலே குருவும்
வாலறிவன் சுக்கிரன் ஆக்ஞை தன்னில்
மாசனைச் சரண்சுழி முனையில் தங்க
கோலமிகு நாடிதனில் ராகுமர்மக் குறியதனில்
கேது நின்று சுபம் கொழிக்க என்றும்.
நவக்கிரக நவமணி மாலை
மாணிக்கம் ஆத வன்தான்
மரகதம் புதனே ஆகும்
காணிக்கை முத்து அந்த
கருதிய சந்த்ரனுக்கே
நாணிக்கை தந்து என்னை நல்லதோர் பவளம் நல்கும்
நானொரு புஷ்ப ராகம் நயந்தவன் குருவே சொல்வான்
வைரமாய் வருவான் சுக்ரன் வைரியோ நீலன் காட்டில்
சௌரியும் நானே என்ற சாகசன் ராகு கேது
உய்வினை அறிந்தே காக்க உரியவை நேயம் நாயேன்
செய்வினை தீமை யெல்லாம் சீர்த்தவன் காலன் காக்க.
ஆரிருள் தன்னை நீக்கி ஆதவன் என்னைக் காப்பான்
தேறிய அறிவை நல்கும் தினகரன் சினந்தான் என்றால்
சூரியன் கோயில் நாடு சுதந்தர மாக நீயும்
மாறிலா எருக்கைத் தேடு மன்மதற் செற்றான் காப்பான்
நாறுமோர் எருக்கில் வாழ்வோன் நல்லதோர் தயிரை நாடு
ஆறுசேர் சடையன் தன்னை அறிந்தவன் நானே என்றால்
தேறிடும் தேவன் நீயே தினகரன் என்றும் காப்பான்
கூறிடா வண்ணம் உன்றன் குறையினை அறிந்தே காப்பான்.
பாற்கடல் பிறந்தோன் திங்கள் பயிரவி தலையிற் கொண்டான்
நூற்கடல் உணர்ந்தோர் போற்றும் நுண்மைகொள் சந்த்ரன் தன்னை
நோற்பவர் திங்க ளூரை நுணுகியே நோற்க நோற்க
போர்ப்படை அவனே ஆவான் புகழ்திருப் பதியே கேது
ஆர்ப்பவர் பகையென் றாலும் அடுத்தவர் கடன்கொள் ளானே
சீர்ப்பதம் சேர்க்கும் தெய்வச் சீர்த்தியன் அவனே தானே
ஏற்பதும் அவனே முத்து ஏன்றவன் அவனே என்றும்
நோற்றிட வேண்டும் தேவன் நுண்மையை உணர்ந்தே போற்று.
ஆதவன் நண்பன் செவ்வாய் ஆரியன் பவள மேனித்
தாதெனும் முதல்வன் செவ்வாய் தறுகணன் கனல்போல் வானே
யாதென யாதுமான மாதவன் மருகன் தானே
தீதிலாச் செட்டி தன்னை தேர்ந்துநீ நிதமும் போற்றச்
திருச்சிறு குடியுள் ளானை தினம்தொழு(து) இன்பம் காண்க
திருப்புள் ளிருக்கு வேளூர் திருவென அறிக நீயே
மறப்பரும் பழனி தன்னை மணந்தவன் பொற்றாள் போற்று
திருவுடை வெண்காட் டீசன் தேர்ந்தநல் புதனே நீயும்
மருவிலாப் பச்சை வண்ண மரகதப் பொருவி லானாய்
உருஅரு ஒன்றுமில்லா உயர்தனிச் சோதி யானாய்
மறுவிலாச் சூர்ய சோம மங்களப் பொய்கை தன்னில்
கரவிலா மனத்தோ டென்றும் கருதியே குளித்தோ ரென்றால்
உறவெலாம் வாய்க்கும் உண்மை உயர்தவப் புதனால் என்றும்
நறவெனப் புதனே காப்பான் நாயகன் அருளால் காப்பான்
குராமணம் கமழும் கூந்தற் கோவிலன் அருளால் காப்பான்.
தனுவொடு மீன மானான் தனித்தவத் தெய்வ மான
மனுவொடு பலரை ஈன்ற மாதவக் குருவே கொண்ட
இணர்மலர் கனக புஷ்ப ராகமே இனியன் கொண்டான்
புணர்பவர் செல்வம் கல்வி பொருந்துவர் மக்கட் பேறே
இனிதெனும் செந்தில் தன்னில் இனியதென் குடித்திட்டை தன்னில்
புனிதமாம் திருவலி தாயத்தில் போற்றியே தொழுவார் உன்னை
புனிதனே குருவே உன்றன் பொன் மனம் எவரே காண்பார்?
கனியும்நீ சனியின் நண்ப கண்விழித் தென்னைக் காப்பாய்.
வைரமே திருநா வலூரின் வாழ்வென வாழும் வாழ்வே!
கைதவம் ஏது மில்லாக் காரணர் போற்றும் சுக்ர
உய்தவம் ஒன்றும் இல்லை உனையன்றி வேறோர் தெய்வம்
எய்திட வழியும் இல்லை ஏன்றவ சுக்ர தோஷம்
எய்திடா வண்ணம் என்னை இரும்புகர் என்றும் காக்க
கொய்மலர் உரிய சூரி கோதையாம் ஆண்டாள் தேடும்
மெய்ம்மையாம் அரங்கம் தன்னை மேவியே பொங்கல் தந்தால்
உய்வினை அதுவே எங்கள் உயர்வதும் அதுவே யன்றோ?
செய்வினை நீங்கு வார்கள் செய்யனே என்றும் காப்பான்
நீலமே விரும்பும் நீலன் நிமலனே உனையே வேட்டு
வேளையும் தவறா வண்ணம் விண்ணவர் தலைவா உன்னை
நாளுமே தொழும்நள் ளாற்றில் நல்லதோர் எள்ளைத் தேடின்
வாழுமே குலமும் வாழ்வும் வடிவுமே சனியும் காப்பான்
மந்தனாம் சனியும் உன்னை மன்னவ னாகிக் காப்பான்
பந்தமாய் விளங்கும் ஈசன் பவித்திர மாகக் காப்பான்
தொந்தமாய்த் தொடர்வான் என்னை தொடர்புடை யிறையாய்க் காப்பான்
சுந்தரன் கருணை யாலே சுதந்தரன் என்றும் காப்பான்.
காளத்தி ஈசன் தன்றன் கருணையே கொண்டோன் இராகு
சீலத்தில் ஞானம் தன்னில் சிறந்தவன் எங்கள் கேது
ஓலத்தில் ஞானம் சேர்க்கும் உயர்தவத் திறமைகொண்ட
ஆலத்தை உடையோர் தங்கள் அருமணி என்னை என்னை
நல்லகோ மேத கத்தை நலம்தரும் வைடூர்யத்தை
அல்லவை நீக்கக் கொண்டாய் அருமையே அருளே கொண்ட
வல்லபை இறைவி செங்கை வனைந்தவை யான என்றன்
நல்லரா குகேதுவே நயனுற என்றும் காப்பாய்.
நவக்கிரக போற்றி
ஓம் அருக்கனே போற்றி எங்கள் ஆதவன் நீயே போற்றி
ஓம் மறக்கவே ஒண்ணாதான மாதவன் நீயே போற்றி
ஓம் கிறக்கமே இல்லா வண்ணம் கிளர்ந்தெழும் சோதி போற்றி
ஓம் உறக்கத்தில் எழுப்பும் கோழிக் குரியவன் நீயே போற்றி
ஓம் மறக்கரும் கருணை கொண்ட மாண்புடை வள்ளல் போற்றி
ஓம் அறக்கரு ணையேகொண்ட ஆண்டவன்நீயே போற்றி
ஓம் மறக்கவே ஒண்ணா தான மாணிக்க மணியே போற்றி
ஓம் எருக்கநல் இலையில் வாழும் எந்தையே என்றும் போற்றி
ஓம் போற்றியே கீழ்வா னோனே! போற்றியே என்றும் போற்றி
ஓம் மாற்றமில் கருணை கொண்ட மாதவப் பேறே போற்றி
ஓம் சாற்றிடும் நீதி சொல்லும் சற்குரு ஆத்மா போற்றி
ஓம் நேற்றென இன்றென் றான நிமலனே போற்றி போற்றி
ஓம் கூற்றுவன் துணையை உன்றன் குழந்தையாய்ப் பெற்றாய் போற்றி
ஓம் சாற்றுமோர் நீதி யான சாயையின் கணவ போற்றி
ஓம் மாற்றமே மாற்றம் எல்லாம் மாற்றிடும் மரபே நீயே போற்றி
ஓம் ஆற்றலும் நீயே எங்கள் அருள்பொருள் ஆனாய் போற்றி
ஓம் போற்றியே திங்கட் செல்வ! புனிதனாம் கங்கை கொண்ட
ஓம் நாற்றிசைப் புலவர் போற்றும் நற்சிவன் கருணை போற்றி
ஓம் ஆற்றவும் அறிவை நல்கும் அருட்டிரு வடிவே போற்றி
ஓம் போற்றவே பிறந்த திங்கள் பூணனி முத்தே போற்றி
ஓம் போற்றியே குமுதம் தன்றன் பொன்முகை அவிழ்ப்போய் போற்றி
ஓம் வீற்றுநீ இடபா கத்தும் விளங்கிடும் கண்ணே போற்றி
ஓம் மாற்றிலாக் கங்கா தீசர் மகிழ்ந்திடத் தலையில் கொண்ட
ஓம் ஆற்றநல் அமிழ்தம் நல்கும் அரியனே போற்றி போற்றி
ஓம் இனனது கதிரைப் பெற்ற இருங்கட் வுளேநீ போற்றி
ஓம் ஈபவர்க் கருளே செய்யும் எழில்அமிழ் தமுதே போற்றி
ஓம் உகப்பவர்க் கினிமை யான உத்தமச் சக்தி போற்றி
ஓம் மிகப்பெரி யவனே எங்கள் மீட்சியே போற்றி போற்றி
ஓம் திங்களே போற்றி எங்கள் திருவருள் தெய்வம் போற்றி
ஓம் மங்களன் போற்றும் செல்வ மாதவன் கருணை போற்றி
ஓம் தங்கிடப் புகழை நல்கும் தயவுடை யவனே போற்றி
ஓம் எங்குமே அமிழ்தம் ஈயும் என்னுயிர் ஆனோய் போற்றி
ஓம் பொங்கியே வெல்லும் எங்கள் புனிதஅங் கார கனேநீ
ஓம் பொங்குறா வண்ணம் எங்கள் போற்றியை ஏற்றருள்வாய்!
ஓம் தங்குறாச் செல்வம் நல்கும் தனுவுனை என்றும் வாழ்த்தக்
ஓம் கங்குலில் பகலில் என்னைக் கருதுக போற்றி போற்றி
ஓம் வாய்மைகொள் செவ்வாய் போற்றி வடிவுடை ஞானம் போற்றி
ஓம் சேய்மையில் காப்போன் போற்றி சிவபரம் பொருளே போற்றி
ஓம் நோயினில் காப்போய் போற்றி நுண்ணறி வினனே போற்றி
ஓம் தேவைகள் தருவோன் போற்றி தினகரன் நண்பன் போற்றி
ஓம் பழனியில் உறைவோய் போற்றி கழனியில் வாழ்வோய் போற்றி
ஓம் உளமகிழ் தெய்வம் போற்றி உத்தமன் நீயே போற்றி
ஓம் கவிமகிழ் வருள்வோன் போற்றி காசினி காப்போன் போற்றி
ஓம் எழிலினுக் கெழிலோன் போற்றி எம்மிறை செவ்வாய் போற்றி
ஓம் பொழிலெனக் கருணை நல்கும் ஒருசிறு குடியன் போற்றி
ஓம் அழலினில் கொஞ்சும் எங்கள் ஆண்டவன் அழகன் போற்றி
ஓம் விழவிலாப் புள்ளும் வேதம் விரும்பிய வேதம் போற்றி
ஓம் கழலினை பணிந்தோம் போற்றி கண்களாய்க் காப்போன் போற்றி
ஓம் போற்றியே இராகு போற்றி பூரணன் கருணை போற்றி
ஓம் மாற்றமில் பலமே போற்றி மாதவன் படுக்கை போற்றி
ஓம் கூற்றமாம் சனியை வேட்கும் குமுதநன் மலரே போற்றி
ஓம் தோற்றமும் முடிவும் ஆன தூயவா நீயே போற்றி
ஓம் ஆற்றவும் தவம் கொண் டுய்ந்த அருந்திறல் போற்றி போற்றி
ஓம் மாற்றரு வீறே போற்றி மந்தனின் துணையே போற்றி
ஓம் ஏற்றதோர் பார்த்தன் கொண்ட எழிற்கணை நீயே போற்றி
ஓம் ஊற்றினில் ஊற்று நீராய் உறைபவன் போற்றி போற்றி
ஓம் ஐந்தலை கொண்டாய் போற்றி அருந்திறல் கேது போற்றி
ஓம் இந்திரன் முதலாம் தேவர் இயம்பிடும் திறலே போற்றி
ஓம் ஐந்திரம் உணர்ந்தோர் போற்றும் அரியகே துவே போற்றி
ஓம் தந்திரம் கற்றோய் போற்றி தருபவன் நீயே போற்றி
ஓம் எந்தையர் நட்பே போற்றி எழிலுடை இறைவா போற்றி
ஓம் சிந்தையைச் செம்மை செய்யும் செய்திரு வாளா போற்றி
ஓம் முந்தையர் கருணை போற்றி மூதறி வாளா போற்றி
ஓம் அந்தியில் பகலில் காக்கும் ஆதாரம் நீயே போற்றி
ஓம் தனுவொடு மீனம் கொண்ட தனிக்குரு போற்றி போற்றி
ஓம் இணர்மலர் இன்பம் போற்றி என்னுடை யவனே போற்றி
ஓம் துணைவரும் செல்வ போற்றி தூயனே குருவே போற்றி
ஓம் துணைநலம் செல்வம் போற்றி தூயமலர் முல்லை போற்றி
ஓம் கவிதரும் சுக்ரன் போற்றி கண்ணொன்று பெற்றோள் போற்றி
ஓம் புவிமகிழ் தருவோன் போற்றி பூரணன் பொற்றாள் போற்றி
ஓம் புதனெனும் புலவன் போற்றி புகழ்தரு வோனே போற்றி
ஓம் மதிமகன் நீயே போற்றி மங்களம் தருவோன் போற்றி
ஓம் காகவா கனனே போற்றி கனிவுடைச் சனியே போற்றி
ஓம் போகமே நல்கும் மந்தன் பொன்னடி என்றும் போற்றி
ஓம் ஆயுளைக் காப்போன் போற்றி ஆதவன் மகளே எங்கள்
ஓம் நோயினைப் போக்கிக் காத்து நொடியினில் இன்பம் சேர்ப்பாய்
ஓம் நலமெனக் கோயில் கொண்ட நாயகர் காக்க வேண்டும்
ஓம் அவமிலா வண்ணம் எங்கள் ஆண்டவன் அருள வேண்டும்
ஓம் புவனமா தீன்ற செல்வத் துளசியின் கவிதை வேண்டும்
ஓம் உவணமே கொடிகைக் கொண்டான் உத்தமன் உறவு வேண்டும்.
நவக்கிரக போற்றி முற்றும்


No comments:

Post a Comment