Saturday 26 April 2014

Anjaneya Mahimai

ந்து கடவுள்களில் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு சில வழிபாடுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில், ராமரின் தூதராக இருந்த அனுமானுக்கு என,  பிரத்யேக வழிபாடுகளும், கோவில்களும் பல இடங்களில் அமைந்துள்ளது. மனித முகத்துடன் எழுந்தருளும் கடவுள்களை விட இதுபோன்று மிருக முகமும்,  மனித உடலுடன் கூடிய தெய்வங்களான நரசிம்மர், அனுமன், விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம். அதிலும், பிரம்மசாரி கடவுளாக  வழிபடும் ஆஞ்சநேயருக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் 732 கோவில்கள் அமைந்துள்ளன.

இந்த கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது கர்நாடக மாநிலம், பெங்களூர் மைசூர் ரோட்டில் பேட்டராயனபுராவில் அமைந்துள்ள காலி  ஆஞ்சநேயர் கோவில். பொதுவாக ஆஞ்சநேயருக்கு, அனுமன், வாயு குமாரன், மாருதி என பல பெயர்கள் இருந்தாலும், இங்கு எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை  காலி ஆஞ்சநேயர் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். தமிழிலில் உள்ள காற்று என்ற சொல்லை கன்னடத்தில் 'காலி' என்று சொல்லப்படுகிறது. காற்றான வாயு  தேவனின் மகனாக அனுமான் கருதப்படுவதால் இந்த பெயர் குறிப்பிடப்படுகிறது.

பக்தர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தால், காற்று போல் வந்து குறைகளை நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது. வைசாராய பேரரசு ஆட்சி செய்த போது  இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் சிறியதாக இருந்த இக்கோவில் தற்போது பெரிய அளவில் அமைந்துள்ளது. கோவிலில், பல்வேறு 'சுதே'  சிற்பங்களுடன் கூடிய கோபுரம் அழகுற எழுந்துள்ளது. இதில், ஸ்தபதியின் கைவண்ணத்தை கண்கூட காண முடியும். கோவிலில் இருந்து உள்ளே நுழைந்ததும்,  சுவரில் புடைப்பு சிற்பங்கள் எழுந்தருளியுள்ளன. அதனுடன், அழகிய தூண்களுடன் கூடிய மண்டபமும் அமைந்துள்ளது.

மூலவராக ஆஞ்சநேயர் வழிபட்டாலும், பிரதான மூர்த்தியாக திருமலை வெங்கடேசனை போன்று சத்ய நாராயண பெருமாளாக அருள்பாலிக்கிறார். பவுர்ணமி  தினத்தில், இவரை வழிப்பட்டால் நன்மை நடக்கும் என்பது ஐதீகம். காசி, ராமேஸ்வரம், திருப்பதி, திருமங்கலக்குடி, பூவனூர், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர்  கோவில் போன்று இக்கோவிலிலும் பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட ரட்சை வழங்கப்படுகிறது. சத்யநாராயணரின் கையில், மஞ்சள் கட்டிய கயிறு ரட்சையாக  பக்தர்களுக்கு கட்டப்படுகிறது. இதற்காக, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கட்டி கொள்கின்றனர்.

சத்யநாராயணர், சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். சாந்தம், காருண்யம்,  ஆனந்தம் மலர்ச்சி ஆகியவை  நிறைந்த திருமுக மண்டலத்தில் அழகு வசிக்கிறது. இங்கு, வழிப்படும் மக்கள் உப்பு, காரம் சேர்க்காத உணவை படைத்து வழிபடுகின்றனர். இக்கோவிலில்,  குழந்தை வரம், தடைப்பட்ட திருமணம் நடப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் வழிபாடு நடத்தினால் நிச்சயம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. மேலும், தடைப்பட்ட  காரியங்களும் இவரை வழிபடுவதால் தங்கு தடையின்றி நடக்கும் என்பதால் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.

இங்கு புடைப்பு சிற்பமாக மூலவரான 'காலி' ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பக்தர்களை நோக்கும் கண்கள், முறுக்கு மீசை, வலது கையை மேலே  உயர்த்தி அபயம் தருவது போலும், இடது கையை இடுப்பில் சவுகாந்திகா மலருடன் இருப்பது போன்றும், வால் வளைந்து நுனியில் மணி கட்டியபடி  அருள்பாலிக்கிறார். இவருக்கு செந்தூரம் கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது. புத்திகூர்மை, சோம்பல் நீக்கி, எதிர்ப்பு விலகி வெற்றி பெற இவரை  வணங்குகின்றனர். இதனுடன், வாகனங்களில் பாதுகாப்பு பயணம் செய்ய இவரை வழிபடுகின்றனர்.

கோவிலில், வல பக்கம் சீதா தேவியுடனும், இடப்புறம் தம்பி லட்சுமணனுடனும் கல்யாண ராமரும், விநாயகர், நவகிரகங்கள் என பரிவார தெய்வங்களும் இங்கு  அருள்பாலிக்கிறார். கோவிலில், 9 நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 48 நாட்கள் தலா 48 சுற்றுகள் சுற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது  நம்பிக்கை. பவளமல்லி மாலை இங்கு அணிவிக்கப்படுகிறது. பவுர்ணமி, சனிக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அப்போது, சிறப்பு  வழிபாடும் நடத்தப்படுகிறது.

கோவில் வழிகாட்டி:

பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் வழித்தடத்தில் இக்கோவில் உள்ளது. கெங்கேரி செல்லும் பஸ்கள் இந்த வழித் தடத்தில் இயக்கப் பகின்றன. பஸ்வசதிகள்  மட்மின்றி வாகன வசதிகளும் உள்ளன. கோவிலில் விசேஷ நாட்களில் பூஜை நேரத்தில் மாற்றம் இருக்கும். சாதாரண நாட்களில், காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.
Each of the gods or worship the Hindu deity, a few considered importa

No comments:

Post a Comment