Wednesday 16 April 2014

SHIRDI SAI PUJA MURAI

1. இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரை நியமித்தோ செய்யலாம். ஆனால் சுயமாக செய்யும் போது நம் கவனம் பெருகும். ஈடுபாடு அதிகரிக்கும் என்ற காரணத்தால் சுயமாக செய்வது நல்லது. பூஜையை தொடங்குவதற்கு முன் அனைவரும் ஒன்றாக ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு சாயி நாத் மஹாராஜ்கீ ஜய் என்று 3 முறை கூற வேண்டும். பிறகு அவரவர் இஷ்ட தெய்வங்களை மனதில் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

2. பின்னர், சாயி நாதரை மனதில் நினைத்து விபூதியை இட்டுக் கொள்ள வேண்டும். குங்குமம், சந்தனம் வைத்துக் கொள்ளலாம்.

3. பூஜை செய்யும் இடத்தில் ஒரு மணையை போட்டு, அதன் மீது புதிய வெள்ளை துணியையோ அல்லது துவைத்து சுத்தம் செய்த வெள்ளைத் துணியையோ போடவும்.

4. அந்த ஆசனத்தின் மீது சாயி பாபாவின் சிலையையோ அல்லது படத்தையோ வைத்து இரு பக்கமும் தீபம் ஏற்ற வேண்டும். பசு நெய்யிலோ அல்லது நல்லெண்ணையிலோ தீபம் ஏற்ற வேண்டும்.

5. பூஜை தொடங்குவதற்கு முன் பாபாவின் படத்திற்கோ அல்லது சிலைக்கோ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும். நல்ல மணமுள்ள ஊதுவத்தியை ஏற்ற வேண்டும்.

எனக்கு சமர்ப்பிக்கப்படும் இலை, புஷ்பம், தீர்த்தம் எதுவாகிலும் அதை பரிசுத்தமான மனதோடும், பக்தியுடனும் எனக்கு சமர்ப்பிப்பார்களேயானால் அவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் சாயி நாதர். இதையேதான் பகவத்கீதை 9வது அத்தியாயத்தில் ராஜவித்யா ராஜ குஹ்யா யோகத்தில் 26வது ஸ்லோகத்தில் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு கூறினார்.

பத்ரம், புஷ்பம், ஃபலம், தோயம், யோமே, பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் ச் னாமி ப்ரயதாத்மன : 

மேலுள்ள விசயத்தை நினைவில் கொண்டு, பரிசுத்தமான மனதோடும், பக்தி விசுவாசத்துடனும் பூஜை பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், விசேஷமான பலனை பெறலாம் என்பது உறுதி.

No comments:

Post a Comment