Monday 21 April 2014

viratha palankal

காந்தி விரதம் : கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பின் துவிதியையில் தொடங்கி அனுஷ்டித்தால் தேக ஆரோக்கியமும், நல்வாழ்வும் பெறுவான். 

சவுபாக்கிய விரதம் : இந்த விரதத்தை பங்குனி வளர்பிறை திருதியையில் தொடங்கிச் செய்தல் வேண்டும். உப்பில்லா உணவு உட்கொள்ளுதல், அந்தணத் தம்பதியருக்கு உணவு அளித்துத் தர்மங்கள் செய்தல் வேண்டும். வைகாசி, புரட்டாசி, மாசியிலும் இந்த விரதத்தை கடைபிடித்து தான தர்மங்கள் செய்யலாம். 

தமனசத் திருதியை விரதம் : இதில் விரதமிருந்து தேவியை மருக்கொழுந்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

ஆத்ம திருதியை விரதம் : மாசி வளர்பிறை திருதியையில் தொடங்கி மாதம் ஒரு அம்பிகையை (கவுரி, காளி, உமா, பத்திரை, துர்க்கை, காந்தி, சரஸ்வதி, வைஷ்ணவி, லக்ஷ்மி, பிரகிருதி, சிவை, நாராயணி வழிபடுவோர் சொர்க்க வாசம் பெறுவர்.)





No comments:

Post a Comment